கோவையைச் சேர்ந்த சிலர், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கத்தினருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதாக கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர், மூன்று குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு? இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை - muslims
கோவை: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இஸ்லாமியர்கள் தொடர்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கோவை மாநகர காவல்துறையினர் இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் வீடுகளில் சோதனை
கரும்புகடை பகுதியில் ஆட்டோ பைசல், உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் சதாம் உசேன், பீளமேடு பகுதியில் முகம்மது புர்கான் ஆகியோர் வீடுகளில், இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் காவல் துறையினருடன் வருவாய்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் வீடுகளில் சோதனை
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ பைசல் என்பவரும், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி கொலை வழக்கில் சதாம் உசேன் என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.