கோயம்புத்தூர்:தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், கோவை மாநகர பகுதியில் உள்ள ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில், அமைக்கப்பட்டுள்ள மென்பொருள் செயலியில், புகார் கொடுக்க வருபவர்கள் கூறும் தகவல் முறையாக பதிவு செய்யப்படுகிறதா?, புகார் தாரர்கள் கொடுக்கும் மனுவுக்கு தீர்வு காணப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், கோவை மாநகர பகுதியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க காரணமாக இருந்த காவல் துறையினர் மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி சங்கர் கலந்து கொண்டு 41 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கி பாராட்டினார். இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சந்தீஸ், சிலம்பரசன், சுகன்யா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “கோவை மாநகரப் பகுதியில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப்.11) நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்து கேட்கப்பட்டது. இதில் சிலர் தங்களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.