தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்துவட்டி 2.0 அதிரடி சோதனை... மருந்து கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது! - Two arrested including drug store owner

கோவை சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை காவலர்கள் மேற்கொண்ட கந்துவட்டி 2.0 சோதனையில் மருந்து கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கந்துவட்டி 2.0 அதிரடி சோதனை
கந்துவட்டி 2.0 அதிரடி சோதனை

By

Published : Jul 29, 2022, 7:56 AM IST

கோயம்புத்தூர்:தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் ஆப்ரேஷன் கந்துவட்டி 2.0 என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு இடங்களில் கந்துவட்டி தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து அதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கோவை மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனையில், சூலூர் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல்துறை சரக்கத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து விட்டு அதற்கு அசலுக்கு மேல் கூடுதல் வட்டி வசூலித்ததாக தனிப்படை காவல்துறையினர் சரவணகுமாரை கைது செய்தனர்.

அதேபோல சாரதாம்பாள் நகரை சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான இளங்கோவன் என்பவர், பொள்ளாச்சியை சேர்ந்த பஷீர் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், அசலுக்கு மேல் வட்டி கேட்டதாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

கந்துவட்டிக் கொடுமை மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:வேற்று மதத்தவரை திருமணம் செய்துகொண்ட தன் மகளை ஆட்டோ ஏற்றிக்கொல்ல முயன்ற தந்தை

ABOUT THE AUTHOR

...view details