தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல்...

பொள்ளாச்சி: குடும்பத் தகராறில் மருமகள் கடித்ததால் காயமடைந்த மாமியாருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து மாமியார் அளித்த புகாரின் பேரில் மருமகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

mother-in-law
mother-in-law

By

Published : Dec 16, 2019, 6:21 PM IST

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் பத்திர எழுத்தர் ஆவார். நாகேஸ்வரியின் மகன் சரவணகுமார் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சரவணகுமார் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி தொடர்ந்து கண்டித்ததால் சரவணகுமார் அவ்வபோது தனது தாயார் நாகேஸ்வரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால், கல்பனாவுக்கும் மாமியார் நாகேஸ்வரிக்கும் தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சண்டையில் மாமியார் நாகேஸ்வரியை மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மருமகள் கடித்ததால் தலையில் காயமடைந்த நாகேஸ்வரி

இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று நாகேஸ்வரி மின்நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன் தாக்கி அவரது தலை பகுதியில் பயங்கரமாக கடித்துள்ளார். இதில் நாகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் ஆறு தையல் போட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மகாலிங்கபுரம் காவல் துறையினர் கல்பனாவை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details