தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேயர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை முயற்சி..! என்ன காரணம்? - Coimbatore Corporation office

Coimbatore Corporation office: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மேயர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில்  தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபர் கைது
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 6:33 PM IST

கோயம்புத்தூர்: கோவை உக்கடம் அடுத்த ரேஷ்மா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நாசர் (வயது 47), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், இஸ்லாமிய கட்சி ஒன்றில் மாநிலப் பேச்சாளராகவும் பதவி வகுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலை பெற்ற கைதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் நேற்று (டிச. 1) விக்டோரியா ஹால் அருகேயுள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளார். பின்னர் தன் மீது டீசலை ஊற்றியபடி, மேயர் அறையை நோக்கி ஓடியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரை உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:சாலையில் தலை தனியாக உடல் தனியாக கிடந்த இளைஞர்.. பொன்னேரி பகீர் சம்பவம்!

முன்னதாக, கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக கோவை மாநகராட்சி உதவிப் பொறியாளர் ஜீவராஜ் (வயது 58), ஆட்டோ ஓட்டுநர் நாசர் மீது உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்ததுள்ளது.

அப்புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நாசர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மேயர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க நபரால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும், ஆட்டோ ஓட்டுநர் நாசர், தான் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் சீரமைத்து தர வேண்டி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அதன் காரணமாகத்தான் அவர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details