பொள்ளாச்சியில் தோட்டத்தில் 90 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடைசி தோட்டத்து சாலையில் வசிக்கும் மைதீன் (20) நவம்பர் 10ஆம் தேதி இரவு போதை தலைக்கேறிய நிலையில் 90 வயதான மூதாட்டியை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்க முயற்சி செய்துள்ளார்.
பாட்டியை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்க முயன்ற இளைஞர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததையடுத்து மைதீன் தப்பியோடியுள்ளார். பொதுமக்கள் துரத்தி பிடித்து மைதீனை பிடித்து மேற்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மேற்கு நிலைய காவல் துறையினர், மதுபோதையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்க முயன்றதாக மைதீன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி அவிநாசி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் 90 வயது பாட்டியை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.