கோவை: சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியைச்சேர்ந்தவர், வழக்கறிஞர் செல்வகுமார். இவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் 5 ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நாய்கள் சத்தமிட்டதால் அவரது மனைவி மற்றும் மகனிடம் சென்று வெளியே பார்க்கக் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது மாடு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் அவர்கள் பொருத்தி இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர்.
அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாட்டை அவிழ்த்துக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் சென்று தேடிப்பார்த்துள்ளனர். இருட்டான பகுதியில் மாடு நின்று கொண்டு இருப்பதைக்கண்டு மீண்டும் அந்த மாட்டை தோட்டத்தில் கட்டி உள்ளனர்.
மாடு திருட முயற்சி: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை! பின்னர் இது குறித்து சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச்சென்ற காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி...போலீஸ் விசாரணை