கோயம்புத்தூர்: தமிழ்நாடு காவல்துறையின் முன்மாதிரி திட்டமாக, கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, மன உளைச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்கவும், அதற்கான ஆலோசனைகளை வழங்கவும் "போலீஸ் அக்கா" என்ற திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு பெண் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகள், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேநேரம் மாணவிகள் கொடுக்கப்படும் தகவல்கள் ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்கப்படும்.