பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையிலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளிக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டத்துக்கு 2018 ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாவட்டங்களில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஜூலை மாதம் உத்தரவிட்டது.
அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 119 போக்சோ வழக்குகளும், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 84 முதல் தகவல் அறிக்கைகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.