கோவையில் பாமக மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, நேற்று நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றுக்கு சென்று பத்தாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மதுபான கடை ஊழியர்கள், அவரது செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு அவரை தாக்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கு விளக்கமளித்த ஸ்ரீநிதி, "துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறந்து இருந்ததால், துடியலூர் காவல் நிலையத்தில் சென்று தகவல் தெரிவித்துவிட்டு, அதனை நிரூபிக்க டாஸ்மாக் கடை திறந்து இருப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தேன்.
இதுவரை பல்வேறு மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து அதற்கு தீர்வு கண்டு வந்துள்ளேன். நொய்யலில் மணல் கொள்ளையை தடுத்தேன். இதற்கு என் மீது போலி வழக்குகள் போடப்பட்டது. அதேபோல் கோவையில் தடாகத்தில் மண் கொள்ளையையும் தடுத்து, அதற்கு போலி வழக்கு போடப்பட்டு 15 நாள்கள் சிறை சென்றேன்.
ஞாயிறுக்கிழமை முழு உரடங்கில் சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை திறந்திருந்தனர். மாலை நேரம் நடை பயிற்சிக்கு சென்ற போது, கடை திறந்ததை பார்த்து அதிர்ந்தேன். அதை என் மொபையில் போனில் புகைப்படம் எடுத்து காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினேன். இதை டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களின் முதலாளிக்கு தகவல் கொடுத்தனர்.