தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதவிடாய் வலி: மாணவி தற்கொலை!

கோவை: மாதவிடாயின்போது ஏற்படும் வலியை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

By

Published : May 1, 2020, 1:09 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த விவசாய பண்ணை பகுதியைச் சேர்ந்த தம்பதி நாகராஜ், பாக்கியம். இவர்களின் மகள் ரோகிணி (17). பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய இவர் தற்போது தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே ரோகிணிக்கு மாதம் மாதம் ஏற்படும் மாதவிடாயின்போது தாங்க முடியாத அளவு வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். அதுபோல் காலையில் வயிற்று வலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது துப்பட்டாவால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

இது குறித்து தகவலறிந்த ஆழியார் காவல் துறையினர் ரோகிணியின் உடலை மீட்டு, கோட்டூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:குழந்தை பெற்ற பின் தாய்க்கு கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details