நாளை மறுநாள் (நவ.14) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனை தவிர்க்கும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் ராசிபாளையத்தில் உள்ள கேபிஆர் கல்லூரி மாணவர்கள் பசுமை தீபாவளி கொண்டாடினர்.
அப்போது அவர்கள் 'வெடிக்கு பதிலாக செடி' என்ற தலைப்பில் ராசிபாளையம் அரசுப் பள்ளி முன்பு 700 மரக்கன்றுகள் நட்டனர். கல்லூரி மாணவர்களுடன் இந்தியா பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பசுமை தீபாவளி கொண்டாடினர்.
பசுமை தீபாவளி கொண்டாட்டம் இதுகுறித்து மாணவர்கள் தெரிவித்ததாவது, "பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. எனவே அதனை பாதுகாக்கும் வகையில் பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரம் நட வேண்டும்" என்றனர்.
பசுமை தீபாவளி குறித்து கல்லூரி முதல்வர் அகிலா கூறியதாவது, "தற்போது உள்ள காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிக அவசியம். ராசிபாளையம் ஊராட்சி மன்றம், நீர்வள இயக்கம் வனம், இந்தியா பவுண்டேஷன் சார்பில் பசுமை தீபாவளி கொண்டாட முடிவு செய்து 700 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரியில் பட்டாசு வெடிக்கத் தடை!