கோவை மாவட்டம், பொள்ளாச்சி வால்பாறையைச் சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி அருள்ராஜ்.
இவர் வால்பாறை குரங்கு முடியில் தையலகம் நடத்தி வருகிறார். நேற்று (ஆக25) தையல் இயந்திரம் வாங்க பொள்ளாச்சி வந்தவர் பழைய செல்போன் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
பொள்ளாச்சி தாலூகா காவல் நிலையத்தின் எதிரில் உள்ள இந்த தனியார் கடையில் ரூ.2500 கொடுத்து பழைய போனை வாங்கியிருக்கிறார்.
இந்த போனை ஆன் செய்தபோது அது வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து மீண்டும் கடையில் சென்று கேட்கும் போது மாற்றிதர முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
அருள்ராஜ் வாதாடிய பின்னரும் எதுவும் நடக்காததால் வீடு திரும்பலாம் என நினைத்தார். ஆனால், இரவு நேரத்தில் யானைகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால் வீட்டிற்குச் செல்ல முடியாமல் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளார்.
மாற்றுத் திறனாளி அருள்ராஜ் பேசிய காணொலி மீண்டும் காலை அந்த கடைக்குச் சென்று கேட்ட போது போனும் மாற்றி தரமுடியாது, பணத்தையும் திருப்பதர முடியாது என கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மேற்கு காவல் நிலையம் சென்று அருள்ராஜ் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கல்லறை நிலத்தை அபகரிக்க முயற்சி - உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளி மனு!