தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Photographer arrested: கோவையில் பாலியல் வன்புணர்வு: போட்டோகிராபர் கைது - கோவையில் பாலியல் வன்புணர்வு செய்திகள்

Photographer arrested: சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த புகைப்படக்கலைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போட்டோகிராபர் கைது
போட்டோகிராபர் கைது

By

Published : Dec 25, 2021, 5:15 PM IST

Photographer arrested: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் போட்டோகிராபர் கணேஷ் ஆனந்த். இவர் கோவை கணபதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார்.

அவரது முகநூல் பக்கத்தில், தான் திரைப்படம் ஒன்று எடுக்க இருப்பதாகவும், அதில் நடிக்க அழகு, இளமை உள்ள நடிகை தேவை என விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

இதை பார்த்த கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணேஷ் ஆனந்தை தொடர்பு கொண்டு தனக்கு நடிக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.

அந்த இளம் பெண்ணை நேரில் வரவழைத்த கணேஷ் ஆனந்த், அவரை பல்வேறு பகுதிக்கு அழைத்து சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் மூன்றாம் தேதி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, கணபதியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு அப்பெண்ணை மீண்டும் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் ஆடையை ஒழுங்குபடுத்துவது போல அருகில் சென்ற கணேஷ் ஆனந்த், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து, கணேஷ் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மதுரை அருகே ரூ.12 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details