தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு! - பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை பாஜக மாவட்ட அலுவலகம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு...!
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு...!

By

Published : Sep 22, 2022, 10:30 PM IST

கோவை: சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாநகர் மாவட்டத்தலைமை அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச்சென்றனர். அதேபோல் ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸார் வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கோவையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பெரும்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு!

இதையும் படிங்க:Video: ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details