கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை கல்லார் செட்டில்மெண்ட் மலைவாழ் மக்களின் நலன் கருதி அனைத்து கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், கடந்த 2017 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அதன் அருகாமையில் உள்ள தெப்பக்குளம் மேடு பகுதியில் தற்காலிக குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் குடியிருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு அவர்களுடைய பாரம்பரியத்தை விட்டுவிட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று பல முறையும் போராடியும் இதுவரைக்கும் அலுவலர்கள் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
தற்போது வழங்கப்பட்டுள்ள மனுவின் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் நல்லதொரு முடிவை தருகிறோம் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளதால் ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களுடைய நலன் கருதி அனைத்து கட்சி சார்பாகவும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வால்பாறை தாசில்தார் ராஜனிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும் மலைவாழ் மக்களின் பெண்கள் மாதத்தில் மூன்று நாட்கள் தனியாக இருக்க கூடிய சூழ்நிலையில் 15 நாட்கள் ஆண்களின் கண்ணில் படாமல் இருப்பது அவர்களுடைய பாரம்பரியம் இதனால் அப்பகுதியில் பெண்களுக்காக 7 குடிசைகள் அமைக்க உத்தரவு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.