தமிழ்நாடு

tamil nadu

வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சார் ஆட்சியரிடம் மனு

By

Published : Sep 8, 2020, 9:03 AM IST

பொள்ளாச்சி: வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சார் ஆட்சியரிடம் மனு
வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சார் ஆட்சியரிடம் மனு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராமத்தில் மேற்கு கட்டைக்காடு பகுதியில் மலசர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.

இவர்கள் அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை கிராமத்தைவிட்டு அப்புறப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் கூறுகையில், "2015ஆம் ஆண்டு நாங்கள் குடியிருந்த வீடுகளை காலிசெய்து எங்களை அப்புறப்படுத்தினர். பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கடந்த ஐந்து வருடங்களாக இருக்க இடமில்லாமல் அகதிகளாக அருகில் உள்ள தோட்டங்களில் தஞ்சம் அடைந்து குடும்பத்துடன் இருக்கிறோம். ஆதலால் நாங்கள் இருந்த நிலத்தை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சார் ஆட்சியர் வைத்தியநாதன் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details