கோயம்புத்தூர் உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றிவந்தார்.
பழனிச்சாமியிடம் வருமானவரித் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வருமான வரித்துறை அலுவலர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
பழனிச்சாமியின் அரசுத்தரப்பு உடற்கூறு ஆய்வு அறிக்கை விரைவில் வழங்கிட மனு - காசாளர் பழனிசாமி மரணம்
கோயம்புத்தூர்: லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் அரசுத்தரப்பு உடற்கூறு ஆய்வு அறிக்கை விரைவில் வழங்கிட வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பழனிச்சாமியின் உடற்கூறு ஆய்வை, பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒரு மருத்துவரும், அரசு மருத்துவர்களும் இணைந்து செய்திட மாவட்ட நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் மருத்துவர், உடற்கூறு ஆய்வு அறிக்கையை கொடுத்துவிட்டார். ஆனால் அரசு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருவதாக பழனிச்சாமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். உயர்நீதிமன்றம் மூன்று மாதத்திற்குள் இவ்வழக்கை முடித்து, நிவாரணம் வழங்க உத்திரவிட்டும் காலம் கடத்தப்படுவதாகக்குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், பழனிச்சாமியின் அரசுத்தரப்பு உடற்கூறு ஆய்வு அறிக்கையை வழங்கிட வேண்டும் என்றும் நிவாரண தொகை வழங்கிட வேண்டும் எனவும் பழனிச்சாமியின் மனைவி, மகன் ஆகியோர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.