நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கடந்த 6ஆம் தேதி சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி இளைஞர் ஒருவரை அழைத்து காலணியை கழற்ற வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை கண்டித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.எப்.ஐ, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே சிவஞானம் ”முதுமலை யானைகள் முகாமிற்கு சென்ற வனத்துறை அமைச்சர் அங்குள்ள பழங்குடி இளைஞர் ஒருவரை அழைத்து காலனியை கழற்றுமாறு கூறிய வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.