தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தை அமாவாசை: பட்டீஸ்வரர் திருக்கோயிலில் முன்னோர்களுக்கு தர்பணம் - முன்னோர்களுக்கு தர்பணம்

கோவை: தை அமாவாசையை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

perur temple
perur temple

By

Published : Jan 24, 2020, 2:41 PM IST

கோவையில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள நொய்யல் ஆற்று படித்துறையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை, அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.

தை அம்மாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்பணம்

முன்னதாக, நொய்யல் நதியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் குளித்துவிட்டு பூஜைகளில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details