ஆந்திர மாநிலம் இச்சாபுரத்தைச் சேர்ந்தவர் பாபாராவ். இவர், பத்து வருடங்களாக கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற பாபாராவ் சபரிமலைக்கு மலைப்போட்ட உறவினர்கள் 35பேருடன் கோவை வழியாக ரயிலில் மீண்டும் கோவைக்கு வந்துள்ளார்.
இந்த ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்த போது, உறவினர்கள் அவரிடம் உணவு வாங்கி கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதையோற்ற பாபாராவ் ரயில் நிலையத்தில் உள்ள, ஓட்டலில் 35பேருக்கு உணவு வாங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளர், பாபாராவுக்கு உணவு வழங்க தடை விதித்துடன் ரூ. 1,500 அபராதமும் விதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடந்தை பாபாராவ் உறவினர்கள் வாக்குவாத்தில் ஈடுப்ட்டனர்.