தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கல்விக்காக தான் வெள்ளையர்களை பெரியார் ஆதரித்தார்’ - ஆ. ராசா

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெள்ளைக்காரர்கள் கல்வியை தர நினைத்ததால் தான் பெரியார் அவர்களை ஆதரித்தார் என எம்.பி. ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 11, 2023, 4:48 PM IST

கோயம்புத்தூர்: ஆர்.எஸ். புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நேற்று (பிப்.10) மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் மட்டுமின்றி பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உட்பட்ட மாநிலங்களிலும் இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை புரிந்துக்கொள்வதற்கு மருப்பவர்களாக உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருண்ட காலமாக உள்ள நிலையில், கோவையில் மெழுகுவர்த்தி மூலம் ஒளி ஏற்றப்பட்டுள்ளது.

1800 களில் தொடங்கியதே இட ஒதுக்கீடு. இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களாக தற்போது வரை இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. Backward class ஐ அறிமுகப்படுத்தியது வெள்ளைக்காரன். பின் தங்கியவர்கள் என்ற வார்த்தை கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டதை, அம்பேத்கர் சமூகத்தில், கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக மாற்றினார்.

யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். என்னை ஒருவன் தாழ்ந்தவன் என்று சொல்கிறானோ இல்லையோ. தாழ்ந்தவனாகவே நடந்து கொள்வது உளவியல். இந்த ஜாதிய பண்பை உடைப்பது தான் சமூக நீதி. அப்படி உடைப்பதற்காக தான் இட ஒதுக்கீடு அப்படி உடைப்பதற்காக தான் கல்வி. நான் பெற்ற கல்வியால் சாதியால் என்னை விட உயர்ந்தவன் எவனும் இல்லை என்னை விட தாழ்ந்தவன் எவனும் இல்லை என்று சொல்ல மாட்டேன் வெள்ளைக்காரர்களுக்கு மனிதாபிமானம் இருந்தது.

வெள்ளைக்காரனை பெரியார் ஆதரித்ததற்கு அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியை வழங்க நினைத்தார்கள்.
பெரியார், சாதி ஒழிய போவதில்லை, எதுவும் நடக்கப்போவதில்லை சுதந்திர நாள் துக்க நாள் என்றார். 7 லட்சம் கோடி பொருளை வெள்ளைக்காரன் கொண்டு போய் அங்கு வைத்து விட்டான் என சசிதரூர் மற்றும் மோடியின் பக்கத்தில் உள்ள அமைச்சர்கள் பேசுகின்றனர்.

அதற்கு நான் கேட்டேன் வெள்ளைக்காரன் எடுத்துக் கொண்டு போவதற்கு எங்கள் வீட்டில் எதுவும் அப்போது இல்லை. வெள்ளைக்காரன் எடுத்துப் போன இரும்பு டாடா, பிர்லாவிடம் இருந்தது. பிர்லாவிடம் காந்தி இருந்தார். காந்தியிடம் காங்கிரஸ் இருந்தது. காங்கிரஸ் பிராமணர்களிடம் இருந்தது. கல்வி என்பது 2000 ஆண்டு 3000 ஆண்டாக மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்ட கல்வியை நான் கேட்காமலேயே கொடுக்கும் மனம் வெள்ளைக்காரனுக்கு இருந்தது.

ஆனால் கேட்காமலேயே எங்களது சொத்துக்களை லாவகமாக நாடாளுமன்றத்தில் வைத்து திருடி போகிறீர்களே நீ நல்லவனா அவன் நல்லவனா இதை கேட்டால் சொல்லி . ராஜா தேச துரோகி என்று சொல்லுவார்கள். பார்ப்பனப் பட்டமும் பர பள்ள பட்டமும் போய் எல்லோரும் மனிதப் பட்டத்திற்கு வர போராடும்போது தேச துரோகம் என்றால் அதை நான் சாகும்வரை செய்வேன்.
அப்போது 10விழுக்காடு இட ஒதுக்கீட்டை எடுத்து போயிருந்தால் ராஜா ஓபன் கமிஷனில் வர முடியுமா? Backward class ஐ தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வைத்திருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள்.

வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர், காந்தியை பார்த்து என்ன refer பண்ண நீ யார் என்றார். அப்பறம் தான் தனித்தொகுதி கொடுத்தார்கள். கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடு தெரியாமல் எடுத்துப் போகிறார்கள். ஜாதியால் இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டாம் என்றார்கள். அப்போது அம்பேத்கர், யாரெல்லாம் சமூகத்தில் பின்தங்கி உள்ளார்களோ அவர்களை கவனித்துக் கொள்கிறேன் என்றார். அதன் பின்புதான் socially educational backward வந்தது.

இட ஒதுக்கீடு ஆய்வு செய்யும்போது தான் தெரிகிறது தாழ்த்தப்பட்டவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ அதே நிலையில் கள்ளர்கள் சாணர்கள் உள்ளனர் என்று. நாடாளுமன்றத்தில் தேசபக்தியில் பலர் பேசுகின்றனர். வெள்ளைக்காரன் குறித்த கேள்விக்கு என்னை தேச துரோகி என்கிறார்கள். பத்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை எடுத்தது தேச துரோகமா? எங்களுக்குத் தெரிந்தே 10 விழுக்காடு இடம் எடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியல் வெள்ளைக்காரர்களிடம் இருந்ததால் இட ஒதுக்கீடு எனக்கு எளிதாகிவிட்டதாக அம்பேத்கர் சொன்னார். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களும் அதிகாரத்தில் வர வேண்டும் என்றார் அம்பேத்கர். ஆளுநர் சனாதனம் எனத் தொங்கிக் கொண்டிருக்கிறார். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஐந்து, ஆறு திட்டங்கள் இருந்தன. இந்திய அரசியலமைப்பின் basic structureஐ மாற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை.

அம்பேத்கர், பெரியாரை படிக்காமல் இந்தியாவில் அரசியலில் வரக்கூடாது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்ற அம்பேத்கர். அதற்கு ஆணையத்தை ஏற்படுத்த மறுத்தவர் நேரு. இட ஒதுக்கீடு தான் இந்திய அரசியல். ஆட்சியைக் கலைக்க ரத யாத்திரை, சமத்துவத்தை உளவியல் ரீதியாக கட்டமைக்க இட ஒதுக்கீட்டை திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டின் மரபு என்று உடன்கட்டையை ஆதரித்து பேசினார். நாங்கள் நிறுத்து என்றோம். 200 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு போர் நடந்து வருகிறது. சாதி யார் பார்கிறார் என கேட்பவர்கள் சுப்ரீம் கோர்ட்டை பார்த்து வா; இஸ்ரோவை பார்த்து வா; ஐஐடி-யை பார்த்துவா. 70 ஆண்டுகளாகியும் 6 விழுக்காடு மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

5.9 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 30ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெறுபவர்களில் தனியார் துறையில் 85 விழுக்காட்டில் 0.97 விழுக்காட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, 3 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 15 விழுக்காடு அரசு துறையில் வேலைவாய்ப்பில் 6 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களிடம் உள்ளது.

இட ஒதுக்கீட்டை தெரிந்துகொள்ள மண்டல் கமிஷனை படியுங்கள். பெரியாரை அண்ணாவை கலைஞரை படியுங்கள் ஸ்டாலினை ஆதரியுங்கள்” என்றார். இந்த நிகழ்வில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, ஆதித்தமிழர் பேரவை அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200 நாளாக போராட்டம்.. விவசாயிகளை சந்திக்க சென்ற வெற்றிச்செல்வன் கைது.. அரசியல் தலைவர்கள் கண்டனம்..

ABOUT THE AUTHOR

...view details