தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச மாடுகள் வழங்குவதில் முறைகேடு - பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை: இலவச மாடுகள் வழங்குவதில் அரசு முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இலவச மாடுகள் வழங்குவதில் முறைகேடு
இலவச மாடுகள் வழங்குவதில் முறைகேடு

By

Published : Mar 8, 2020, 12:08 AM IST

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சீங்கப்பதி, முள்ளங்காடுபதி, ஆனைகட்டி, தூமனூர் உள்ளிட்ட பகுதியில் பழங்குடியின கிராம மக்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 56 விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டன.

அதில் சாடிவயல் பகுதியைச் சேர்ந்த பாப்பா, ஏசுமணி, ஷீலா, மாதவி, சரோஜினி, லட்சுமி ஆகியோரது பசு மாடுகளும் கன்று குட்டிகளும் உயிரிழந்தன. மேலும் முள்ளாங்காடு மக்களுக்கு வழங்கப்பட்ட மாடுகள் எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளன.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "இறைச்சி கடைக்கு அனுப்பக்கூடிய வயதான மாடுகளை அரசு எங்களுக்கு வழங்கியதால் மாடுகள் அடிக்கடி நோய்பட்டு உயிரிழக்கின்றன. ஆகவே இனி நல்ல ஆரோக்கியமான மாடுகளை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: தண்ணீர் தேடி விளைநில கிணற்றுக்குள் விழுந்த காட்டுமாட்டை மீட்ட வனத் துறையினர்

ABOUT THE AUTHOR

...view details