கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 189 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளுக்காக தார் சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டதால் நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
தற்போது பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.