தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் அதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டமானது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் கலந்துகொண்டன.
இதில் பள்ளி மாணவ மாணவிகளும் பள்ளி சீருடையுடன் கலந்துகொண்டு மண்சட்டி, கடப்பாரை போன்றவற்றை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில்:
'மத்திய அரசு அறிவித்த கல்விக் கொள்கையை, மத்திய அரசு அமல்படுத்தாத நிலையில் அதை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு 5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
செய்தியாளர்களைச் சந்தித்த கு.இராமகிருட்டிணன் இந்தப் பொது தேர்வால் குழந்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். நடுத்தர குழந்தைகளின் படிப்பு இடை நிற்றல் ஏற்படும். எனவே, குழந்தை தொழில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்தத் தேர்வை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 5, 8 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் மன அழுத்தை ஏற்படுத்தும் - கருணாஸ்.!