தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் பணிகள் மக்களுக்கு தெரிய வேண்டும்'- எம்.எல்.ஏ. கார்த்திக் கோரிக்கை - கோவை மாநகராட்சி’

கோவை: மாநகராட்சி நிர்வாகம் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டுமென சிங்காநல்லூர் திமுக எம்.எல.ஏ. கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

People need to know the work done by the corporation administration
People need to know the work done by the corporation administration

By

Published : Sep 4, 2020, 3:14 PM IST

கோவை மாவட்டம் வடகோவை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தலைமையிலான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய எம்.எல்.ஏ கார்த்திக், கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தோல்வியடைந்துள்ளது. கோவையில் நோய்த்தொற்று அதிகமாக பரவ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலுள்ள கோவை மாவட்ட நிர்வாகமே காரணம்.

கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஊரடங்கு காலத்தில் கோவை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் துறைகள் பெரிதும் பாதிப்படைந்தன.

கோவை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு தமிழ்நாடு அரசு மற்றும் கோவை மக்களின் வரிப்பணம் அனைத்தும் பல்வேறு முறைகளில் வீணாக்கப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கும் மேலான வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மக்கள் மன்றத்தில் என்னென்ன திட்டங்களை மேற்கொண்டுள்ளதென மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சை பின் போக்குவரத்துறை அமைச்சர் குலதெய்வக் கோயிலில் வழிபாடு!

ABOUT THE AUTHOR

...view details