பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்து மீன்களை கன்டெய்னர்களில் ஏற்றி கேரளாவில் விற்பனைக்காக இரவு நேரங்களில் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகளில் மீன்களை பதப்படுத்தி வைத்துள்ளதால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாலைகளில் கசிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால், சாலையை கடக்கும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது, இதைத் தடுக்க காவல் துறையினர் இரவு நேரங்களில் மீன்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்துவருகின்றனர்.
லாரியிலிருந்து கழிவு வெளியேறியதால் துர்நாற்றம்; மக்கள் அவதி! - highway
கோவை: பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மீன் ஏற்றி வந்த இரண்டு லாரிகளிலிந்து கழிவு வெளியேறி துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துர்நாற்றம்
இந்நிலையில் சார்- அலுவலகம் எதிரில் மீன் ஏற்றி வந்த இரண்டு கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்துச் சார்- ஆட்சியரிடம் லாரியை ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.