கோவை - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் காரணமாக கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்து ரயில் சேவை தொடங்கிய நிலையிலும் தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் இயக்கப்படவில்லை எனத்தெரிகிறது.
இதையொட்டி, தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கக்கோரி, போராட்டம் நடத்துவது தொடர்பாக கடந்த வாரம் ரயில்வே போராட்டக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்முடிவில்ரயில்களை இயக்க வலியுறுத்தி முதல் கட்டமாக கையெழுத்து இயக்கம் நடத்துவது, அடுத்தகட்டமாக ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக்கோரி தென்னக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
மேலும் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பயணிகளிடம் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது. இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், 'முதல்கட்டமாக போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில், அடுத்த கட்டமாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக’ தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மலை ரயில் சேவை மீண்டும் ரத்து - தென்னக ரயில்வே!