தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் ஊரடங்கு: மாவட்டம் முழுவதும் அமைதியான சூழல் நிலவுவதாக ஆட்சியர் தகவல்! - கோவிட்-19 பெருந்தொற்று

கோவை: நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டும், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமலும் மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

people-curfew-collector-says-there-is-a-prevailing-situation-in-the-district
people-curfew-collector-says-there-is-a-prevailing-situation-in-the-district

By

Published : Mar 22, 2020, 9:36 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மக்கள் ஒன்று கூடாமல் இருக்க மத்திய அரசு மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் வீடுகளுக்குள்ளேயே உள்ளனர்.

நகரின் முக்கிய பகுதிகளான பொள்ளாச்சி, காந்திநகர், வால்பாறை என அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டிருந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அங்கிருந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தனது அலுவலகத்திலுருந்து தண்ணீர், உணவுகளை வழங்கவும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இன்று இரவு மாநகராட்சி மண்டபங்களில் தங்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.

மாவட்டம் முழுவதும் அமையான சூழல் நிலவுவதாக ஆட்சியர் தகவல்

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், பாதுகாப்பு ஏற்பாடு நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டவர் யாரேனும் வந்து தங்கியிருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளாதால், கோவையிலுள்ள ரயில் பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மக்கள் ஊரடங்கு: நாளை காலை 5 மணிவரை நீடிப்பு

ABOUT THE AUTHOR

...view details