தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள்: சிறைப்பிடித்த பொதுமக்கள் - மக்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள்

கோவை: மக்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை பொதுமக்கள் சிறைப்பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

people-arrestet-employees
people-arrestet-employees

By

Published : Feb 28, 2020, 6:53 PM IST

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதிகளில் ஆதார் அட்டைகள், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அடையாள அட்டைகளை நான்கு பேர் சேகரித்துவந்துள்ளனர். அதைச் செல்லிடபேசி, மடிக்கணினியில் பதிவுசெய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அவர்களிடம் கேட்டபோது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு, விற்பனைப் பொருள்கள் குறித்த கணக்கெடுப்பு போன்றவற்றிற்காக வந்ததாகப் பதில் கூறியுள்ளனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அப்பகுதி மக்கள் உக்கடம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்கள் நான்கு பேரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வில்சன் கேர் என்ற தனியார் நிறுவன ஊழியர்கள் என்றும் அந்த நிறுவனம் குழந்தைகள் பாதுகாப்பு, நோய் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம் என்றும் தெரியவந்தது.

சிறைப்பிடித்த பொதுமக்கள்

அவர்கள் பொருள்களை விற்பனை செய்வதற்காகவே மக்களிடம் வந்ததாகத் தெரிவித்தனர். ஆனால் அதற்காக எதற்கு ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டைகளை வாங்கினார்கள் என்று காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுக் கலைக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய ஷிப்ட் முறை அறிமுகம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details