தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை காவலர்களுக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனம் - புதிய இருசக்கர ரோந்து வாகனம்

காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள மாவட்டக் காவலர்களுக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.

Police
Police

By

Published : Jun 9, 2021, 10:13 PM IST

கோயம்புத்தூர்:துடியலூர், வடவள்ளி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் அதிக குற்ற சம்பவங்கள் நிகழ்வதால், அங்கு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன.

இதையடுத்து, அங்குள்ள 35 காவல் நிலையங்களில் 15 காவல் நிலையங்களுக்கு இரண்டு ரோந்து வாகனங்களும், மீதமுள்ள காவல் நிலையங்களுக்கு ஒரு வாகனமும் வழங்கவிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக, 10 ரோந்து வாகனங்களுக்கு கொடியசைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளார்.

கூடிய விரைவில் ரோந்துப் பணியினை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்கும் வசதியும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ’100’ என்ற எண்ணின் மூலமும் ’காவலன் செயலி’ மூலமும் நாள் ஒன்றிற்கு 40 முதல் 60 புகார்கள் வருவதாகத் தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் இதை புகார் அளிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு மாத காலத்தில் மதுபானம் கடத்திய சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details