தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் குப்பை - நோயளிகள் கடும் அவதி - தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பயன்படுத்தும் கழிவுகளால் தூர்நாற்றம் ஏற்பட்டு உள்நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குவியலாக குப்பை தேக்கம்-நோயளிகள் கடும் அவதி!
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குவியலாக குப்பை தேக்கம்-நோயளிகள் கடும் அவதி!

By

Published : Oct 10, 2022, 10:55 PM IST

கோவை:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை 2011ஆம் ஆண்டு தரம் உயர்த்தபட்டு தலைமை மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு மடத்து குளம், உடுமலை, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஐந்தாயிரத்து மேற்பட்டவர்கள் உள்நோயளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிணவறை பகுதி அருகில் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் பயன்படுத்தும் கழிவுகளால் தூர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைப் பெற்று திரும்பும் நோயளிகள் மீண்டும் நோய் வாய்பட உள்ளது எனவும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் நலன்கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:திமுக பொதுக்குழுவில் மனம் வெம்பி பயத்துடனே முதலமைச்சர் பேசியுள்ளார்’ - செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details