தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்துக்குள் மழையில் நனைந்தபடி பயணித்த பயணிகள் - அரசு பேருந்துக்குள் மழை

அன்னூர் அருகே மேற்கூரை சேதமடைந்த ஒரு அரசுப் பேருந்துக்குள் மழையில் நனைந்தபடி பயணிகள் பயணித்த காணொலி, அப்பேருந்துகளின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

g
g

By

Published : Sep 24, 2021, 8:14 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு A11 என்ற அரசு நகரப் பேருந்து கருமத்தம்பட்டி வழியாக இயக்கப்பட்டுவருகிறது. பழைய பேருந்தை மாற்றி புதிய பேருந்தை இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றனர்.

அரசுப் பேருந்துக்குள் மழை

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (செப். 23) மாலை பரவலாக கனமழை பெய்தது. அப்போது கருமத்தம்பட்டியிலிருந்து அன்னூர் நோக்கிச் சென்ற A11 அரசுப் பேருந்தில் மழைநீர் உள்ளே வடிந்ததால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமானது. இதனால் பயணிகள் ஒருவித அச்சத்துடனே பேருந்தில் பயணம் செய்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. மேலும் அரசுப் பேருந்துகளின் தரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து: சாதுரியமாகச் செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

ABOUT THE AUTHOR

...view details