கோவை மாவட்டம், கருத்தம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி பெறும்- சஞ்சய்தத் உறுதி - சஞ்சய்தத் உறுதி
கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
![நாடாளுமன்றத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி பெறும்- சஞ்சய்தத் உறுதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3125366-thumbnail-3x2-con.jpg)
சஞ்சய்தத்
அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக அமர செய்வோம் என மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாடு முழுவதும் ராகுல்காந்தி அலை வீசி வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். அதேபோல் ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பதும் உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.