கோயம்புத்தூர்:மதுக்கரையை க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்- ரோமிலா தம்பதியினர். இவர்களுக்கு ஜேசன் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களது குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் உள்ளது.
இந்நிலையில், குழந்தையின் சிகிச்சைகாக சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. இதற்கு அமெரிக்க மருந்து நிறுவனம் குலுக்கல் முறையில் இந்த குழந்தைக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை செலுத்தியது.
இதனிடையே குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு ஒன்பது லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் குழந்தையின் பெற்றோர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதியுதவி செய்யுமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.