பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் அரசாணைப்படி 70 நாள்களுக்கும் தண்ணீர் விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை இந்த நீரானது சுழற்சி முறையில் திறக்கப்படும் என தெரிவித்ததாகவும், ஆனால் கடந்த 30 நாள்கள் நடைபெற்ற பாசனத்திற்கு 14 நாட்கள் மட்டுமே தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த பாசனத்தை நம்பி 11 ஆயிரத்து 181 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த நீரானது முறையாக திறக்கப்படவில்லை எனில் அங்கு பயிரிடப்பட்ட வாழை, தென்னை, சோளம் போன்ற அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவர் என்றும் தெரிவித்தனர்.
எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சங்கத்தின் தலைவர் விக்ரம் முத்து ரத்தின சபரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாண் மண்டலம் - பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட முதல்வரிடம் கருணாஸ் கோரிக்கை