தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்துணவுத் திட்டத்தில் நீரா பானத்தை சேர்க்கவேண்டும் - கள் இயக்கம் கோரிக்கை - palm wine nallasamy

பொள்ளாச்சி: தாய்ப் பாலுக்கு நிகராக சத்தான நீரா பானத்தை பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தில் வழங்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

nallasamy
nallasamy

By

Published : Dec 18, 2019, 3:06 PM IST

பொள்ளாச்சியில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ’கள் மதுபான பொருள் அல்ல. நிபந்தனைகள் இல்லாமல் நீரா இறக்க அனுமதித்தால் மட்டுமே நீரா திட்டம் வெற்றிபெறும். இல்லை என்றால் இந்தத் திட்டம் வெற்றி பெறாது. நீராவியில் ஆல்கஹால் இல்லை. அது ஒரு சத்தான உணவு பொருள் ஆகும்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

சத்தான தாய்ப்பாலுக்கு நிகரான நீரா பானத்தை பள்ளிக்குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். கள் இறக்க அனுமதி கேட்டு அரசை வலியுறுத்தி ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி போராட்டம் நடைபெறும்.

மறு வரையறைக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருந்தால் உள்ளாட்சி நல்லாட்சியாக இருந்திருக்கும். இப்போது இருக்கும் நிலையில் பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு இருக்க வேண்டும். திருத்தங்களை செய்யாமல் தேர்தலை நடத்துவது அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல் ஆகும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவில் எலி; உத்தரப்பிரதேசத்தில் நடந்த அவலம்!

ABOUT THE AUTHOR

...view details