போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க ஓவியங்கள் வரையும் பணி தீவிரம் கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சமீப காலமாக போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. அரசு சுவர்கள், பாலங்களின் தூண்கள், பள்ளி சுவர்கள் என திரும்பும் இடம் எல்லாம் போஸ்டர்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் கோவை மாநகராட்சியில், மக்கள் முகம் சுழிக்கும் வகையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், போஸ்டர் கலாச்சாரம் ஒழிந்த பாடு இல்லை. இந்நிலையில், இதனை ஒழித்து தூய்மையாக்கும் விதமாக கோவை மாநகராட்சி ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளது.
அதாவது, போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்கும் வண்ணம் கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரையும் பணியை தொடங்கியுள்ளது. இந்த ஓவியங்கள் கண்களுக்கு இனிமையாக அமையும் வகையில் உள்ளது.
இதில் இயற்கை சார்ந்த ஓவியங்கள், பொற்கால ஓவியங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படம், தமிழ்நாட்டின் வரலாற்று மிக்க கட்டிடங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஓவியங்கள் உள்ளிட்டவை வரையப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் வழக்கு: மீண்டும் அதிமுக வெற்றி!