கோவை :அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இந்த வாரம் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி முக ஓவிய நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இதில் கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தும் ஓவியங்கள், இயற்கையைப் பாதுகாக்கும் ஓவியங்கள், ஜூலியஸ் சீசர் ஆகியவற்றை ஓவியங்களாக வரைந்தனர். இந்தப் போட்டியில் கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு வரலாறு படிக்கக்கூடிய அக்பர் அலி என்ற மாற்றுத்திறனாளி மாணவன் புலிகளை காப்பதற்கான ஓவியத்தை அவரது கால்களில் வரைந்தார்.