தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெல்லும் - ஓபிஎஸ் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெல்லும்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெல்லும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

By

Published : Feb 10, 2022, 5:17 PM IST

கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சிவானந்த காலனி பகுதியில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு

இந்தக் கூட்டத்தில் முதலில் உரையாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, "அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சியை ஐந்தாண்டுகளில் அளித்துள்ளோம்.

தற்பொழுது காவல் துறையினர் திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுவருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் அனைத்து இடங்களையும் பிடித்து காட்டுவோம்" என்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

அதிமுக எஃகு கோட்டை

பின்னர் சிறப்புரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம், "கொங்கு மண்டலம் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. 2006ஆம் ஆண்டு ஜெயலலிதா நடத்திய கூட்டம்தான் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி இடம் பெற்றதற்கு காரணமாக அமைந்தது.

பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைத் தந்தவர் ஜெயலலிதா. 100 ஆண்டு காலங்கள் ஆனாலும் அவர் அளித்த திட்டங்களை மறக்க முடியாது. திமுக ஆட்சியில் ஏதாவது நலத்திட்டங்கள் தரப்பட்டுள்ளனவா?

காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி இறுதி அரசாணையைப் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. ஆனால் 505 பொய் வாக்குறுதிகளைக் கூறி பரப்புரை செய்தவர்கள் திமுகவினர். மக்கள் நம்மை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் ஆளப்போவது அதிமுகதான். உறுதியாக அனைத்து இடங்களிலும் வெற்றிபெறுவோம்" என்றார்.

இதையும் படிங்க:பள்ளி நுழைவு வாயிலில் ஊராட்சி மன்ற அலுவலகம்: பள்ளிக்கே ஒப்படைக்க கோரி போராட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details