தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மாவட்ட அதிமுக அலுவலத்தில் இருந்த ஓபிஎஸ் படம் அகற்றம் - ADMK

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்த அவரின் புகைப்படம் அகற்றப்பட்டது.

Breaking News

By

Published : Jul 11, 2022, 4:00 PM IST

கோயம்புத்தூர்:இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்தை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முழுமையாக நீக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை அதிமுக தொண்டர்கள் அகற்றினர். தொடர்ந்து அப்புகைப்படத்தை கீழே போட்டு மிதித்து உடைத்தும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், ‘அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்ற ஓபிஎஸ்’ என முழக்கங்களை எழுப்பினர்.

கோவை மாவட்ட அலுவலத்தில் ஓபிஎஸ் படம் அகற்றம்

பின்னர் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதத்தில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:"ஈபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்" - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details