தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ்ஸை ஒருமையில் பேசிய கோவை முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி!

ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் செய்து கொண்டே இருக்கலாம், 10 பேரை கூட்டுவதற்கு கூட ஓபிஎஸ்சிற்கு யோக்கிதை கிடையாது என அதிமுக முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 28, 2023, 7:53 PM IST

ஓபிஎஸ்ஸை ஒருமையில் பேசிய கோவை முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி!

கோவை: சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொதுச்செயலாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் அதிமுகவினரின் கொண்டாட்டத்தில், கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலை பகுதியில் உள்ள, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

இதய தெய்வம் மாளிகை முன்பு பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ''எடப்பாடியார் வாழ்க, வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார்'' என கோஷங்களை எழுப்பி கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த கோவை முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி, ''நீதி தேவதைக்கு நன்றிகள். சிறுசிறு துருப்புகளை வைத்துக் கொண்டும், சட்டத்தின் ஓட்டைகளை வைத்துக் கொண்டும் இந்த இயக்கத்தை கெடுப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்த துரோகிகளுக்கு, பாடம் புகட்டுகின்ற வகையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் செய்து கொண்டே இருக்கலாம். ஒரு கூட்டம் நடத்துவதற்குக் கூட யோக்கிதை கிடையாது. 10 பேரை கூட்டுவதற்குக் கூட அவனுக்கு யோக்கிதை கிடையாது'' என ஒருமையில் விமர்சித்தார். ஓபிஎஸ் நீதிமன்றத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இது தொடர்ந்து கொண்டே சென்றால் தொண்டர்கள் கொந்தளிக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதியப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க - ராமதாஸ்!

ABOUT THE AUTHOR

...view details