பொள்ளாச்சி பகுதியில் கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
இந்த வழக்கை விசாரணை நடத்திய சி.பி.ஐ., ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு மீது போடப்பட்ட குண்டர் சட்டம் போதிய ஆதாரம் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டது.
Opposition to the repeal of the Thug Act in Pollachi, பொள்ளாச்சி சம்பவத்தில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு இதை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கதின் தலைவி கு.வாசுகி, 'இந்த வழக்கில் திட்டமிட்டு குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியாகவே கருத்துவதாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கை பாரபட்சமின்றி நடத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்!