குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் முன்பு கருப்புத் துணியை தங்களது சட்டையில் குத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எப்.ஐ அமைப்பின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம், கருப்புத் துணியை சட்டையில் குத்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:குடியுரிமை திருத்தச் சட்டம்: திருவாரூரில் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!