கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்களைக் காண்பதற்கு கைதிகளின் உறவினர்கள் பலரும் வருகைதருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் சிறையிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், சிறையில் பார்வையாளர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுந்துவந்தது.
இந்நிலையில் சிறை அலுவலர்கள் பலர் கோவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனைச் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி கழிப்பறைகளைக் கட்டித் தரும்படி கோரிக்கைவிடுத்திருந்தனர்.