கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணத்துக்கடவு - மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான்; இவரது மகன் சல்மான் (22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். சூதாட்டம் விளையாட நண்பர்களிடம் கடனாக பணம்பெற்று விளையாடியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சூதாட்டத்தால் பணத்தை இழந்ததால் சல்மான் வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.