வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. கிலோ வெங்காயம் 180 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் வெங்காயத்தின் விலை உயரக்கூடும் என்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இருந்தாலும் இந்த வெங்காயத்தின் விலை ஏற்றம் விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை. வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் மட்டுமே பயன் அளித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வெங்காய விலையேற்றம், ஆனாலும் விவசாயிகள் நஷ்டம்! இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “தற்போது பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்கிறோம். அதனை வாங்கிய வியாபாரிகளும் இடைத்தரகர்களும் பதுக்கி வைத்து தற்போது அதிக விலைக்கு விற்கின்றனர். எங்களிடம் குறைவான விலைக்கு வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு தற்போது விலை உயர்ந்த உடன் அதனை வெளியே எடுத்து அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!