தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமலாத்தாள் பாட்டிக்கு குவியும் ஆதரவு!

கோவை: ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள், உதவிகளும் குவித்து வருகிறது.

கமலாத்தாள்

By

Published : Sep 12, 2019, 11:48 PM IST

கோவை மாவட்டம், ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கமலாத்தாள்(85). இவர், அந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சிறிய உணவகம் நடத்தி வருகிறார். குறிப்பாக, ஒரு இட்லியை ரூ.1க்கு விற்பனை செய்து வருகிறார். இதன் காரணமாக, கமலாத்தாள் பாட்டி அனைவருக்கும் பரீட்சயமாகி விட்டார்.

கமலாத்தாள் பாட்டி

தனது தொழிலில் முதல் 15 ஆண்டுகள் கமலாத்தாள் பாட்டி, இட்லியை 50 பைசாவுக்கும், அதன் பிறகு 15 ஆண்டுகளாக இட்லியை 1 ரூபாய்க்கும் என மக்களுக்கு விற்பனைக்கு கொடுத்து வருகிறார். வீட்டிற்கு வாங்கிச்செல்ல பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார். பாட்டியின் சுவையான இட்லிக்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வாடிக்கையாக உள்ளனர். பாட்டிக்கு ஆதரவாக அவரது பேரன் புருஷோத்தமன் இருந்து வருகிறார். 1 ரூபாய் இட்லிப்பாட்டி பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அவரது கடைக்கு இட்லி சாப்பிட நாளுக்கு, நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் பாட்டியை பாராட்டி ஏராளமான பேர் பதிவிட்டு வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி, கமலாத்தாளை அலுவலகத்திற்கு வரவழைத்து வாழ்த்தினார்

பின்பு, இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் ராசமணி, கமலாத்தாள் பாட்டியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்தினார். பின்பு, தனது வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதாகக் கூறிய பாட்டிக்கு, மாவட்ட ஆட்சியர் பிரதமர் மோடியின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்’ கீழ் வீடு கட்டித்தரப்படும் எனவும், தேவையான உதவிகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்வீட்

இந்நிலையில் இது குறித்து, மகேந்திரா நிறுவன குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா " கமலா பாட்டியின் தொழிலுக்கு முதலீடு செய்ய நான் உதவுகிறேன், கமலாத்தாள் கதையைக் கேட்டால் நாம் செய்யும் சாதனைகள் ஒன்றுமில்லை என்றாகி விடும்" என ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். இதையடுத்து, மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கியது.

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கியாஸ் சிலிண்டர் வழங்கியபோது

மேலும், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்து கமலாத்தாள் பாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு குவியும் பாராட்டுகளும், ஆதரவுகளும்

ABOUT THE AUTHOR

...view details