தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை அருகே கரடி தாக்கி ஒருவர் படுகாயம் - கோவை அருகே வால்பாறை

வால்பாறை அருகேவுள்ள தனியார் எஸ்டேட்டில் கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடந்துள்ளார்.படுகாயம் அடைந்த முட்டாமுறுவை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வால்பாறை அருகே கரடி தாக்கி ஒருவர் படுகாயம்
வால்பாறை அருகே கரடி தாக்கி ஒருவர் படுகாயம்

By

Published : Jun 2, 2022, 10:50 PM IST

Updated : Jun 2, 2022, 11:03 PM IST

கோயம்புத்தூர்: வால்பாறை அருகேவுள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளுக்கு கேரளா, கர்நாடக மற்றும் ஒரிசா, பீகார், ஜார்கண்ட் பகுதிகளிலிருந்து குடும்பத்துடன் வந்து தங்கி எஸ்டேட் பகுதிகளில் தேயிலை பறிப்பது, தோட்ட வேலை செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை அருகேவுள்ள செங்குத்துப்பாறை பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முட்டாமுறு என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது வனப்பகுதியை விட்டு வெளியே வந்த கரடி ஒன்று முட்டாமுறுவை தாக்கியது.

இதில், அவர் பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட அங்கு பணியில் இருந்தவர்கள் உடனடியாக கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதற்கிடையே முட்டாமுறுவை சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் இடத்திற்கு வந்த வனஅலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு பலி

Last Updated : Jun 2, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details