கோவை: வால்பாறை அருகே நல்ல காத்து எஸ்டேட், கரும்பாலம் பகுதியில் உள்ள சோலையார் எஸ்டேட்டை சேர்ந்தவர் துரைராஜ் வயது 51. இவர் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை அவரை உதைத்து தள்ளியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.
வால்பாறையில் யானை தாக்கி ஒருவர் படுகாயம் - Durairaj of Sholaiyar Estate was injured
வால்பாறையில் யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வால்பாறையில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:தமிழகத்தில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர் - இந்தி பிரசார் சபா தகவல்